சங்க மாநில செயற்குழு கூட்டம் 25-01-2014 தீர்மானங்கள்


தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்    25-01-2014 அன்று மதுரை மாட்டு தாவணி அருகில் உள்ள ஹோட்டல் V-Grandல் மாநில தலைவர் டாக்டர்.G.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.செயற்குழு கூட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர்கள், முன்னால் தலைமை சங்க நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
            மாநில செயற்குழு கூட்டத்தில் இணைப்பில் கண்ட 12 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன..

தீர்மானம் – 1
          கால்நடை பராமரிப்புதுறையில் 10(A)1 ஆணையின் மூலம் பணி அமர்வு செய்யப்பட்ட கால்நடை உதவி மருத்துவர்களின் நிரந்தர தீர்வுக்கு உறுதியளித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் – 2
                        துறையில் 10(A)1 ஆணையின் படி பணியில் சேர்ந்த கால்நடை உதவி மருத்துவர்கள் ஓராண்டு காலம் சிறப்பாக பணிமுடித்திருக்கும் நிலையில் அவர்களுக்கு பணிமாறுதல் மற்றும் ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என இயக்குனரை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் – 3
                    தற்போது துறையில் காத்திருப்போர் பட்டியலிருந்து பணி நியமனம் செய்யப்பட்ட 117  கால்நடை உதவி மருத்துவர்கள் Rs.5200/- grade pay என்பதையும் State subordinate service என்பதையும் மாற்றி Rs.5400/- grade pay மற்றும் Tamil Nadu Vetenary Service என வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் – 4
                    FMD CPஆறாவது சுற்று தடுப்பூசி பணிகளை செவ்வனே செய்ய தேவையான inputs-ஐ முன்கூட்டியே வழங்கவும் தமிழகத்தில் FMD நோய் கிளர்ச்சி கட்டுப்படுத்த பட்டு குறுகிய நாட்களே ஆகி உள்ளதால் ஆறாவது சுற்று பணிகளை மார்ச் 15ம் தேதிக்கு மேல் தொடர நடவடிக்கை மேற்கொள்ளவும் கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம் வழங்கும் strategyஐ பரிசீலித்து Implement செய்யவும் இயக்குனரை கேட்டு தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் – 5
                    கால்நடை பராமரிப்புத்துறையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் அறிவிக்கும் அத்தனை திட்டங்களையும் செவ்வனே செய்து முடிக்க அல்லும் பகலும் அயராது உழைத்து கொண்டிருக்கும் கால்நடை மருத்துவர்களின் நலனுக்கு எதிராக செயல்படும் துறை அலுவர்கள் மற்றும் இதர பணியாளர்களை இயக்குனரின் கவனத்திற்கு கொண்டு செல்வது, இயக்குனர் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து உரிய அறிவுரை வழங்கி சுமுகமான பணி சூழலை உருவாக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் – 6
                    கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கத்திற்கு சென்னையிலே உள்ள இடத்தில் விரைவில் கட்டிடம் கட்டப்பட வேண்டும் அதை விரைந்து முடிக்க தலைமை சங்க நிர்வாகிகள் மேற்கொள்ளும் அத்தனை நடவடிக்கைகளுக்கும்  முழு ஒத்துழைப்பு வழங்க செயற்குழு ஒருமனதாக தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் – 7
                    நோய் கிளர்ச்சி மற்றும் இதர அசாதாரண சூழ்நிலைகளில் துறை அலுவர்கள் உரிய அறிவுரை மற்றும் தெளிவான அணுகுமுறையை கடைபிடிக்காமல்  கால்நடை உதவி  மருத்துவர்கள் மீது பழி போடுவதும் கால்நடை உதவி மருத்துவர்களை தண்டிக்க முயலும் போதும் இயக்குனர் கால்நடை உதவி மருத்துவர்களிடம் உரிய விசாரணை மேற்கொண்டு உண்மை நிலையை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குனரை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் – 8
          கால்நடை மருந்தகங்களுக்கு போதுமான, தரமான மருந்துகளை இம்மாத இறுதிக்குள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குனரை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் – 9
          SFDS, AFDP,Draught mitigation, Free cow/goat scheme ஆகிய திட்டங்களில் திட்டப்பணி முடிந்து அறிக்கை சமர்ப்பித்த பின்னரும் Photo upload, address update போன்ற பணிகளை செய்வதில் உள்ள சிரமங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க இயக்குனரை கேட்டு தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் – 10
                    மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களால் கால்நடை பராமரிப்பு துறையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்த பட்டுக்கொண்டிருப்பதால் துறையில் கால்நடை மருந்தகங்களில் காலியாக உள்ள கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்கவும். ஒவ்வொரு கால்நடை மருந்தகங்களிலும் ஒரு கால்நடை உதவி மருத்துவர், ஒரு கால்நடை ஆய்வாளர், இரண்டு கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பணியிடங்களை கொண்டு செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க இயக்குனரை கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவற்றப்படுகிறது.
தீர்மானம் – 11
                    துறையில் கால்நடை உதவி மருத்துவர்களுக்கு ஏழு நாட்களிலும் வேலை என ஆண்டு முழுவதும் பணி செய்தல் என்பது இயலாத செயல் எனவே எங்களுக்கு மனித அடிப்படை  உரிமைகளில்  ஒன்றான வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்குமாறு கேட்டுகொள்கின்றோம்.
தீர்மானம் – 12

       Brucellosis vaccinationதொடர்பாக:               பல்வேறு திட்டப்பணிகள் இந்த மாதத்தில் முடிக்க வேண்டி உள்ளதால் (SFDS, AFDP, FODDER Depot,DRAUGHT MITIGATION,FREE COW/GOAT SCHEME, IAM WARM,  voucher submission for all schemes, state poultry development scheme, western ghat development scheme, ATMA & FMDP CP 6th round preperation work) அனைத்தும் பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டி உள்ளதாலும், அதை தொடர்ந்து மார்ச் மாதம் 6th round FMD CP பணிகள் நடைபெறவுள்ளதாலும், Brucellosis  தடுப்பூசி பணியினை பணிசுமை குறைவாக உள்ள அடுத்தடுத்த மாதங்களில், இந்த பணிக்கு தேவையான (தடுப்பூசி போடும் பணியாளர் மற்றும் விவசாயிகள் பாதிக்கக்கூடிய தடுப்பூசியாக இருப்பதால்)அனைத்து inputs வழங்கப்பட்டபிறகு சிறப்பாக திட்டத்தை செயலாக்கிடுமாறு இயக்குனரை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

No comments:

Post a Comment

Members are requested to post messages with name , address and mobile number