திருவாரூரை நோக்கி தமிழகத்தின் பார்வைகடந்த வாரம் (06.08.2012)  திருவாரூர் மாவட்ட கால்நடை உதவி
மருத்துவர்களால் ஹோட்டல் செல்வீஸ் இல் அந்த இனிய விழா மாவட்ட ஆட்சி
தலைவர் திரு.சி.நடராசன் தலைமையில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு
மாவட்ட இணையதளத்தை (www.thiruvarur.tnvas.com) துவக்கி வைத்து
சிறப்புரையாற்றினார். அவர் உரையில் கால்நடை மருத்துவர்கள் இன்று சமுதாய
முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதோடு பால் உற்பத்தியை
பெருக்குவதிலும் கருவூட்டலில் கருவுறும் சதவீதத்தை அதிகப்படுத்தவும்
கால்நடை மருத்துவர்கள் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்றும்
கேட்டுக்கொண்டார். டெல்டா மாவட்ட விவசாயிகள் குறிப்பாக திருவாரூர் மாவட்ட
விவசாயிகள் கலப்பு பண்ணைய முறைகளை பின்பற்றி பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பு,
கறிக்கோழி பண்ணைகள், மீன் வளர்ப்பு, பட்டுப்பூச்சி வளர்ப்பு போன்ற
முறைகளை பின்பற்றி தங்கள் பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ளவேண்டும் என்று
கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக பணியில் சேர்ந்துள்ள
கால்நடை உதவி மருத்துவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கால்நடை உதவி
மருத்துவர்கள் கையேட்டினை மாவட்ட ஆட்சியர் வெளியிட மண்டல இணை இயக்குனர்
டாக்டர். வே.சுப்பையன் மற்றும் டாக்டர்.பா.சரவணன் தலைவர் கால்நடை உதவி
மருத்துவர்கள் சங்கம் பெற்றுக்கொண்டனர். மேலும் பெயர் பலகை, நேம் பேட்ச்,
ஏப்ரான் இவை அனைத்தும் கால்நடை உதவி மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டது.
இவ் விழாவிற்கு மாவட்ட செயலாளர் டாக்டர்.ஜி.மகேந்திரன் வரவேற்புரை அளிக்க
உதவி இயக்குனர்கள் டாக்டர்.த.தமிழ்ச்செல்வன் மற்றும் டாக்டர் ஐ.தனபால்
முன்னிலை வகிக்க மண்டல இணை இயக்குனர் டாக்டர்.வே.சுப்பையன் தலைமையில்
விழா நடை பெற்றது. இவ் விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கால்நடை
உதவி மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர்.பா.சரவணன் தமிழ்நாடு அரசின்
திட்டங்கள் குறித்தும் கால்நடை உதவி மருத்துவர்களின் நலம் காக்கும்
கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் இருப்பது குறித்தும் பேசினார். மேலும்
புதிதாக பணியில் சேர்ந்துள்ள கால்நடை உதவி மருத்துவர்களுக்கு அறிவுரையும்
வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டது. இறுதியாக மாவட்ட இணை செயலாளர்
டாக்டர்.சி.தெய்வவிருதம் நன்றி கூற விழா இனிதே முடிவடைந்தது.

மேலும் தகவலுக்கு................

No comments:

Post a Comment

Members are requested to post messages with name , address and mobile number